Pages

Saturday 23 July 2011

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை கமாண்ட் ப்ராம்ப்டில் பார்ப்பது எப்படி?


இப்படத்தை பார்ப்பதற்க்கு முன் நம் கணிணியில் சில முன் தயாரிப்புகளை செய்து கொள்வோமா.........

இந்த வசதியை உபயோகிக்க நம் கணிணியில் டெல்நெட்(telnet) கமாண்ட் enable  செய்யப் பட்டிருக்க வேண்டும்.நீங்கள் விண்டோஸ் எஃஸ்பி உபயோகிப்பவரா,அதிர்ஷ்டவசமாக இந்த வசதி தானாகவே உங்கள் கணணியில் enable செய்யப்பட்டிருக்கும்.நான் விஸ்டா,7 உபயோகிக்கிறேன்,நான் எப்படி இதை enable செய்வது என்கிறீர்களா,வாருங்கள் ஒரு கை தான் பார்த்து விடுவோமே........



* control panel  வாருங்கள்

* program ல் uninstall a program திறங்கள்.

* இடது புறத்தில் turn windows features on or off உள்ளதா.........அதை சொடுக்குங்கள்......

ஒரு சிறிய விண்டோ திறக்கிறதா.

இப்போது telnet client,telnet server(optional) டிக் செய்து ok அழுத்தவும்.அவ்வளவு தான்.உங்கள் கணணியில் டெல்நெட் enable செய்யப் பட்டுவிட்டது......


ஆமாம் இந்த டெல்நெட் என்றால் என்ன என்கிறீர்களா?

TCP/IP ன் மூலமாக ரிமோட் கணிணியுடன் இணைய உதவும் ப்ரோட்டகால் தான் டெல்நெட் ஆகும்.இது  fake email அனுப்பவும் உதவுகிறது.

சரி நேரமாகிக்கொண்டே இருக்கிறது அல்லவா.....வாருங்கள் ஸ்டார் வார்ஸை எழுத்துருவில் பார்க்கலாம்....

ரன் கமாண்டில் cmd டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் பெறவும்.

இப்போது telnet towel.blinkenlights.nl என டைப் செய்து ENTER அழுத்தவும்......திரைப்படம் துவங்கி விட்டதா.......




அப்புறம் என்ன கொண்டாட்டம் தானே!!!

source : cooltips

No comments: