Pages

Saturday 8 October 2011

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலவிகளுக்கான அருமையான ஆட்-ஆன்


              இணையத்திற்கான முக்கியமான பயன்பாடு தகவல்களைத் தேடுவதற்க்காகும். எவ்வளவு விரைவாக நாம் விரும்பிய தகவல்களைப் பெற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்க்கு நாம் அதிகமாக தகவல்களை அறிந்து கொள்கிறோம் இல்லையா.

              நாம் ஏதேனும் ஒரு தகவலைப் இணையத்தில் படித்துக் கொண்டிருக்கையில், அதிலுள்ள ஒரு வார்த்தை,தகவல் குறித்து மேலும் விளக்கம் பெற விரும்பினால் தேடுதளம் செல்ல டாஸ்க் பார் சென்று டைப் செய்வோம்,  அல்லது அந்த வார்த்தையில் ரைட் கிளிக் செய்து நாம் விரும்பிய தேடு இயந்திரம் மூலமாக தகவல்களைப் பெற்றுக் கொள்வோம்.

             இவ்வளவு சிரமப் படாமல், தேடவேண்டிய வார்த்தையை RIGHT CLICK செய்து நமக்கு பிடித்த தேடு இயந்திரத்தில் தகவலைப் பெற்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

             இம்முறையில் நமது நேரத்தை சேமிக்கவே DROG AND DROP ஆட்-ஆன் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலவிகளுக்காக இருக்கிறதே.

பயன்படுத்தும் முறை:

பயர்பாக்ஸ் உலவிகளுக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

              இனி நீங்கள் தகவல் தேட நினைக்கும் வார்த்தையை செலக்ட் செய்து ட்ராக் செய்யவும்.


              இப்போது கூகுள்,யாகூ உள்ளிட்ட ஆறு தேடி இயந்திரங்களில் எதன் வழி தேட விரும்புகிறீர்கள் என பரிந்துரைக்கும் ஒரு சிறிய விண்டோ தோன்றும்.



             இதில் எந்த தேடி இயந்திரத்தில் ட்ராக் செய்கிறீர்களோ அதன்வழி ரிசல்ட் கிடைக்கும்.

              இந்த விண்டோவினை நீங்கள் விரும்பிய முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.


குரோம் உலவிக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இது சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும்.


              இதில் 16 கட்டங்கள், 2 ட்ராப் டவுன் மெனு மற்றும் பட்டன்கள் இருப்பதைப் பார்க்கலாம்.


             ஒவ்வொரு கட்டத்திலும் பெயர் மற்றும் URL க்கான இடம் இருக்கிறது.


              கீழே உள்ள ட்ராப் டவுணில் தேடும் தகவலை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டேபில் காட்டுவதா அல்லது புதிய டேபில் காட்டுவதா என தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் உள்ளது.

 
              நடுவில் உள்ள 4 கட்டங்கள் காலியாகவும், அதை சுற்றி உள்ள 12 கட்டங்களில் நாம் விரும்பிய தேடு இயந்திரத்தை செட் செய்து கொள்ளலாம்.

எப்படி செட் செய்வது:

உதாரணமாக http://www.google.com.sg/search?&q=

             மேலே உள்ள DEFAULT URLஐ சற்று கவனித்தீர்களானால் அது சிங்கப்பூருக்கான கூகுள் தேடி ஆகும்.

             இதை மாற்ற .sg ஐ நீக்கி விடுங்கள்....http://www.google.com/search?&q=

             அவ்வளவுதான் இது போன்று விரும்பிய மற்ற இடங்களிலும் URLஐ அமைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் சொல்லுங்க சகோஸ்

courtesy : viki

Friday 7 October 2011

இ-மெயில் முகவரி சரிதானா?? எப்படி சோதிக்கலாம்??


              ஜி-மெயில்,யாஹூ போன்ற இ-மெயில் சேவை நிறுவனங்கள் மிகத் தரமான ஸ்பேம் ஃபில்டர்களைக் கொண்டு தேவையற்ற, ஆபத்தான மெயில்களால் பாதிப்பு ஏற்படாதவாறு சிறந்த சேவையை வழங்கி வருகிறது நாம் அறிந்ததே.

              இருப்பினும் சில நுட்பமான வழிகளின் மூலமாக ஹேக்கர்ஸ் இந்த ஸ்பேம் ஃபில்டர்களையும் கடந்து தனது வேலையை காட்டவே செய்கின்றனர்.ஏனெனில் இ-மெயில் சேவையானது ஃபிஷ்ஷிங்கில் நம்மை வீழ்த்த உபயோகப்படும் முக்கியமான சேவையாகும்.

              பெயர் தெரியாத முகவரிகளிலிருந்து இ-மெயில் அனுப்பும் எத்தணையோ இலவச ஆன்லைன் சேவைகள் உள்ளன. இத்தகைய சேவைகளின் வழியாக  ஹேக்கர்கள் சிரமமே இல்லாமல் நமது தகவல்களை திருடிக் கொள்ள முடியும். இது போன்ற சந்தேகப்படும்படியான முகவரியைக் கொண்ட இ-மெயில்களை, அது உண்மையான முகவரிதானா என சோதித்துக் கொள்வது நல்லது.

              EMAIL ADDRESS CHECKER எனும் இணையதளம் இந்த வசதியினை இலவசமாக வழங்குகிறது. இது இ-மெயில் சர்வரை தொடர்புகொண்டு நாம் கொடுத்த இ-மெயில் முகவரி சரிதானா என்பதை உறுதிப்படுத்தி சொல்கிறது.

எப்படி சரிபார்ப்பது:

* முதலில் EMAIL ADDRESS CHECKER தளத்திற்க்கு செல்லவும்.

* CHECK எனும் BUTTONற்க்கு முன்னால் உள்ள கட்டத்தில் சரிபார்க்க விரும்பும் இ-மெயில் முகவரியைக் கொடுக்கவும்

* இப்போது CHECK பட்டனை அழுத்தவும்.



* படத்திலுள்ளவாறு ரிசல்ட் கீழாக உள்ள கட்டத்தில் தெரியும். சரியான இ-மெயில் முகவரிகள் பச்சை நிற டிக் மார்க்குடனும், தவறான முகவரிகள் சிவப்பு நிற க்ராஸ் மார்க்குடனும் தெரியும்.

* இ-மெயில் முகவரி குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள INFO  பட்டனை அழுத்தவும்.

*** கவனிக்கவும் : இலவசமாக நாள் ஒன்றிற்க்கு 3 இ-மெயில் முகவரிகளை மட்டுமே ஒரு IPஅட்ரஸிலிருந்து சோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

courtesy : aman saini

Wednesday 5 October 2011

கூகுள் பிளஸில் இப்படியும் ஒரு வசதியா...

       கூகுள் பிளஸில் நாம் பகிரும் கருத்துக்களுக்கு பின்னூட்டமிடுவதைத் தடுக்கவோ,மீள்பதிவாக பகிர்வதைத் தடுக்கவோ முடியுமா??

      முடியும்..இந்த வசதிகளை கூகுள் பிளஸ் நமக்கு வழங்குகிறது.

      ஆனால் நாம் பகிரும் அனைத்து பதிவுகளுக்கும் இந்த வசதி தானாகவே அப்ளை ஆகாது....நாமே மேனுவலாக ஒவ்வொரு முறையும் செட் செய்திட வேண்டும்.

எப்படி செட் செய்வது என்று பார்ப்போமா!!

* Share what's new.. எனும் டைப் செய்யும் பகுதியில் க்ளிக் செய்யுங்கள். post boxக்கு கீழாக Share எனும் பட்டன் தோன்றும்.

* பின்னூட்டமிடுவதைத் தடுக்க மற்றும் பதிவினை Lock செய்ய வலது புறத்தில் உள்ள down arrowவினை க்ளிக் செய்யவும்.



 * இப்போது ஒரு சிறிய drop downமெனு விரியும். இதில் disable comments மற்றும் Lock this post எனும் வசதிகளை enable செய்யவும்.

* இனி உங்கள் பதிவினை பகிரவும்.



            ஆமாம் எதற்காக இந்த வசதியை கூகுள் பிளஸ் வழங்குகிறது. ஒருவேளை ஏடாகூடமாக எதையாவது பகிர்ந்துவிட்டு வசைமொழிகளிலிருத்து தப்பித்துக் கொள்ள விரும்புவோருக்காக இருக்குமோ???

நன்றி : ப்ளாக்கர் சென்ட்ரல்

Tuesday 4 October 2011

புத்தம் புதிய கூகுள் பிளஸ் தீம்


விண்டோஸ்7 உபயோகித்து வருபவர்களுக்கு, கூகுள் வழங்கும் அட்டகாசமான தீம் இது.

பார்ப்பதற்க்கு அட்டகாசமாக இருக்கும் இந்த தீம் உபயோகிப்பதற்க்கும் வித்தியாசமாகவே இருக்கிறது.

20க்கும் அதிகமான ஹை-ரெசலூசன் வால்பேப்பர்கள்,கஸ்டம் ஐகான்கள், ஒலிகள் மற்றும் கர்சர்கள் அடங்கிய இந்த தீம் உபயோகிக்க அருமையாக உள்ளது.....

உங்கள் பார்வைக்காக சில ஸ்க்ரீன் ஷாட்கள்:








இதன் ஐகான் செட்


இதன் கர்சர் செட்


இந்த தீமை பதிவிறக்க இங்கே அழுத்தவும்

முயற்ச்சித்துவிட்டு சொல்லுங்க சகோஸ்

நன்றி : ப்ரவீன், விக்கி

Monday 3 October 2011

கூகுள் பிளஸ் கணக்கை அழிப்பது எப்படி?


ஹாய் சகோஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க. நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் இல்ல. அதான் கொஞ்சம் பில்டப்.

ஓகே இப்ப கூகிள் பிளஸ் கணக்கு வேண்டாம்னு நினைக்கிறவங்க கணக்க முடிச்சிருவமா?   வாங்க

கூகிள் நீண்ட காலமாக சமூக வலைத்தளங்களில் தனது முத்திரையை பதிக்க முயன்று வருகிறது. கூகுள் தனது வேவ் மற்றும் பஸ் எதிர்பார்த்த அளவு போகாத நிலையில், பலத்த எதிர்பார்ப்புடன் வந்திருப்பது தான் கூகிள் பிளஸ்.

மேலும் இதன் எளிய பிரைவசி செட்டிங்க்ஸ்,சர்க்கிள்,ஹேங்க் அவுட் போன்ற சிறந்த அம்சங்கள் வல்லுனர்களால் பெரிதாக பேசப்பட்டாலும் தற்போதுள்ள நிலையில் பேஸ்புக்கை வெல்ல முடியவில்லை என்பதைவிட தொடவும் முடியவில்லை என்பதே உண்மை.

ஆரம்பத்தில் யாரேனும் கூகுள் பிளஸில் இணைந்து கொள்ள அழைப்பு கொடுத்தால் மட்டுமே இணைய முடியும் என்றிருந்தது. இப்போது அனைவருக்கும் கூகுள் பிளஸின் வாசல் திறந்திருக்கிறது.

நீங்கள் கூகிள் பிளஸை கணக்கை அழிக்க விரும்புகிறீர்களா.பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.பயப்பட வேண்டாம், இதனால் உங்கள் ஜிமெயில்,பிளாக்கர் கணக்குகள் எதுவும் பாதிக்கப்படாது.

* ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
* கூகுள் அக்கவுண்ட் என்பதை தேர்வு செய்து பிரைவசி செட்டிங்க்ஸை தேர்ந்தெடுக்கவும்.





*இப்போது இடது புறத்தில் அக்கவுண்ட் ஓவர் வியூ தேர்வு செய்தபின் வலது புறத்தில் சர்விஸஸ் பகுதியை பாருங்கள்.



 * இதில் நீங்கள் கூகுள் பிளஸ் கணக்கை முடிக்க Delete profile and social features என்பதையும், அனைத்து கூகுள் வசதிகளையும் முடிக்க Delete account என்பதையும் தேர்வு செய்யவும்.
* இப்போது நீங்கள் Delete profile and social features என்பதை தேர்வு செய்திருந்தால் Delete Google+ Content ஐ தேர்ந்தெடுத்தபின் Remove Selected Services என்பதை அழுத்தவும்.


தயவுசெய்து கவனமாக கையாளவும், ஏனெனில் கணக்கை அழித்துவிட்டால் திறும்ப பெறமுடியாது.

courtesy : aman sainy