Pages

Saturday 30 July 2011

FACEBOOKன் பழைய CHAT WINDOW பெறுவது எப்படி?

கடந்த வாரம் பேஸ்புக்கின் புதிய வசதிகளில் ஒன்றான நியூ பேஸ்புக் போட்டோ வ்யூவரை disable செய்வது எப்படி? என்று பகிர்ந்திருந்தேன் இல்லையா?

இன்று பேஸ்புக்கின் புதிய chat window லிருந்து  பழைய chat window ற்க்கு எப்படி மாறுவது என்று பார்ப்போமா?

மாறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா?

ஒன்றுமில்லை பழைய ஜாவா ஸ்கிரிப்டை நீக்கிவிட்டு புதிய ஜாவா ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்தால் போதும்.

எப்படி இன்ஸ்டால் செய்வது, ஏதேனும் வழி இருக்கிறதா?

இருக்கிறது. GREASE MONKEY எனும் ஆட்-ஆன் இதற்காக உதவுகிறது.

பழைய விண்டோவிற்க்கு மாறுவதற்க்கு கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள்

1. GREASE MONKEY ஆட்-ஆனை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்

2.ஆட்-ஆனை இன்ஸ்டால் செய்தவுடன், ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.




அவ்வளவுதான்.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.பழைய விண்டோவிற்க்கு மாறிவிட்டீர்களா!!!



குரோம் உபயோகிப்பவர்கள்

இதுவும் கிட்டத்தட்ட பயர்பாக்ஸிற்க்கான அதே வழிமுறைதான்

1.ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.

2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

அல்லது

1.இந்த லிங்கை அழுத்தி குரோம் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

பழைய விண்டோவிற்க்கு மாறி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

குறைகளோ,சந்தேகங்களோ இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

source : cooltips

FACEBOOK குறும்பு

நாம் ஏதேனும் புதிய அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கியவுடன் அதன் போட்டோக்களையோ அல்லது அது குறித்த தகவல்களையோ நமது பேஸ்புக் ஸ்டேடஸில் நண்பர்களுடன் பகிர்கிறோம் இல்லையா?

எப்பொழுதெல்லாம் நாம் நமது ஸ்டேடஸை ப்ளாக்பெர்ரி,ஐபோன்,ஐபாட்,
ஆன்ட்ராய்ட் போன்ற சாதனங்களிலிருந்து பகிரும்போதும், ஸ்டேடஸின் அடியில் via iPhone5 என்பது போல் இருக்கும் கவனித்திருக்கிறீர்களா.



இதையே என்னிடம் ஐபோன் இல்லாத நிலையில், "நான் புதிதாக ஒரு ஐபோன் வாங்கி இருக்கிறேன்" என்று ஸ்டேடஸில் பகிரும் போது



இதை பார்க்கும் குறும்புக்கார நண்பர்கள்,ஏன்டா டப்ஸா நாயே.....என்ன
கத உட்றியா என கவுண்டமணி ரேஞ்சுக்கு நோஸ்கட் பண்ணிவிட்டால்???

சரி இது போன்ற சாதனங்கள் இல்லாமலே எப்படி நண்பர்களை நம்ப வைப்பது.....வாருங்கள் பார்ப்போம்...


இதற்க்காகத்தான் கீழ்வரும் கேட்ஜெட் இருக்கிறதே....

இந்த கேட்ஜெட்டை பயன்படுத்தி BlackBerry, BlackBerry Torch, BlackBerry PlayBook, iPhone, iPhone 4, iPhone 5, iPad, iPad 2, iPad 3, Android போன்ற சாதனங்களிலிருந்து ஸ்டேடஸ் அப்டேட் செய்வது போல் காட்டலாம்.

எப்படி?

இதற்கு நாம் ஒரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.

* முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுன்டில் நுழையுங்கள்.

இப்போது கீழ்காணும் ஏதேனும் ஒரு சுட்டியை பயன்படுத்தி உங்கள் ஸ்டேடஸை அப்டேட் செய்யுங்கள்....












அப்புறம் என்ன இனி தினமும் ஐபாட்,ப்ளாக்பெர்ரி தானா????

source : pctipstricks

Thursday 28 July 2011

ட்விட்டர் கணக்குகளிலிருந்து பரவும் BEACH BODY ஸ்பேம்

ஹேக் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ட்விட்டர் அக்கவுன்ட்களிலிருந்து ஸ்பேம் செய்திகள் பரவி வருகிறது.

உடல் எடை குறைக்க உதவும் சாதனம் குறித்த விளம்பரத்தை தாங்கி வரும் இந்த செய்தி

என்பது போல் வருகிறது.

இந்த பாதிக்கப்பட்ட அக்கவுன்ட்களிலிருந்து எவ்வாறு செய்திகள் பரவுகிறது என்று தெரியவில்லை. ஸ்பேம் செய்திகளின் எண்ணிக்கையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது நமது பாஸ்வேர்ட்கள் திருடப் பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலே உள்ளது போன்ற செய்திகளை காண நேர்ந்தால் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள். மேலும் சந்தேகப்படியான பயன்பாடுகள் மீதான ட்விட்டர் அணுகலை திரும்ப பெற வேண்டும்...இதற்க்கு ட்விட்டர் கணக்கில் நுழைந்தவுடன் வலது மேல் மூலையில் உள்ள செட்டிங்க்ஸ் மெனுவில், connections அல்லது applications என்பதை தேர்வு செய்யவும்...பின் சந்தேகப்படியான பயன்பாடுகளுக்கு நேரே உள்ள REVOKE ACCESS என்பதை அழுத்தித் திரும்பப் பெறவும்.

ட்விட்டர் சேவையை பாதுகாப்பாக தொடருங்கள்....

source :

Tuesday 26 July 2011

ப்ளாக்கர் புது DASH BOARD


ப்ளாக்கர் DASH BOARDஐ எத்தணை நாள் தான் பழைய தோற்றத்திலேயே பார்ப்பது.....ஒரு change வேண்டாமா?





இப்படி இருக்கும் DASH BOARDஐ



எவ்வாறு இப்படி மாற்றலாம்.?

வாருங்கள் பார்க்கலாம்.

உங்கள் URLஐ கவனியுங்கள்.....www.blogger.comஎன்று இருக்கிறதா



இந்த URLஐ draft.blogger.com என்று மாற்றுங்கள் போதும்.


 

இப்போது மேலே உள்ளது போல் make blogger in Draft my default என்பதில் டிக் செய்யுங்கள்......அவ்வளவுதான் டல் திவ்யா தூள் திவ்யா ஆயிட்டாடோய்.

நான் இது நாள் வரை பயன்படுத்திப் பார்த்ததில் comments செட்டிங்க்சில் மட்டும் சில வசதிகள் குறைவாக இருப்பது போல் தெரிகிறது...மற்றபடி அட்டகாசமாக இருக்கிறது.

source : எங்கு படித்தேன் என்று நினைவில்லை,அறியத்தந்தவருக்கு எனது நன்றிகள்.

Sunday 24 July 2011

பயர்பாக்ஸ் சரி! அதென்ன 3D பயர்பாக்ஸ்??

இப்பதிவு நிச்சயம் உங்களை கவரும் என நம்புகிறேன்.








 என்னடா இதெல்லாம் எதோ ஒரு வலைப் பக்கத்தை சுற்றி சுற்றி காட்டுகின்றானே என்று நினைக்கிறீர்களா.....அட வாங்க என்னதான்னு பார்த்துவிடுவோமே....

நாம நம்ம ப்ரவுசர 2D ல மட்டும் தான பார்த்திருக்கோம் இதுவர.....இனி 3D லயும் கொஞ்சம் பார்ப்போமே.....எப்டி???

TILT எனும் பயர்பாக்ஸ் ஆட்-ஆன் தான் இந்த வேலையை செய்யுது.இந்த TILT ஆட்-ஆனை  இங்கே அழுத்தி டவுன்லோட் செய்ங்க.....பின் இந்த பைலை தர தரவென இழுத்துக்கொண்டு போய் பயர்பாக்ஸ் ப்ரவுசரில் போடுங்க...ஆட்-ஆன் இன்ஸ்டால் ஆகிவிடும்....

இனி உங்கள் வெப் பேஜ்களை 3டி வியூவில் பார்க்க CTRL + SHIFT + M அழுத்துங்க....உங்க மவுஸ்,UP,DOWN கீகளை பயன்படுத்தி ZOOM செய்தும்,சுற்றி சுற்றியும் பார்க்கலாம்....

180 டிகிரி அளவில் திருப்பி பார்த்தீங்கனா ஸ்கிரீன்க்கு பின்னால் நின்று பார்ப்பது போலவே இருக்கும்....

அப்புறம் என்ன கலக்க வேண்டியது தானே....

பதிவு பிடித்திருந்தால் சொல்லீட்டுப் போங்க.....

source : labnol

நியூ பேஸ்புக் போட்டோ வ்யூவரை disable செய்வது எப்படி?

பேஸ்புக் சில புதிய மாற்றங்களை நம் ஒப்புதல் இன்றியே புகுத்திவிடுகிறது அல்லவா.உதாரணமாக New facebook photo viewer மற்றும் New chat sidebar.எப்படி திரும்பவும் பழைய வசதிக்கு திரும்புவது எனும் வசதியும் தரப்படுவதில்லை.இந்த வசதி பலருக்கு பிடிப்பதில்லை.குறிப்பாக New photo viewer ல் இமேஜ்கள்  ஒரு கருப்பு நிற விண்டோவில் திறக்கிறது.




சரி எப்படி நாம் இந்த புதிய image viewer ல் இருந்து classic view ற்க்கு மாறுவது?

ஒன்றும் பெரிதான கம்பு சுற்றும் வேலை இல்லை.இதன் url ல் சிறிய மாற்றம் செய்தாலே போதும்.

எதேனும் ஒரு இமேஜை திறக்கவும்.இப்போது இதன் url ஐ கவனியுங்கள்.

உதாரணமாக


http://www.facebook.com/photo.php?fbid=26014396066
6381&set=t.100002201460181&type=1&theater

இந்த url கடைசியில் &theater என முடிகிறதா.இப்போது &theater மட்டும் delete செய்து விட்டு ENTER தட்டுங்கள்.அவ்வளவுதான் நீங்கள் classic view ற்க்கு மாறிவிட்டீர்கள்.



சரி எப்படி மீண்டும் new photo viewer க்கு மாறுவது?just refresh.செய்யுங்கள் போதும்.
குறிப்பு பயனுள்ளதாக இருந்ததா........தவறுகள் இருந்தால் பின்னாட்டத்தில் தெரிவிக்கவும்.

source : pctipstricks

Saturday 23 July 2011

ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தை கமாண்ட் ப்ராம்ப்டில் பார்ப்பது எப்படி?


இப்படத்தை பார்ப்பதற்க்கு முன் நம் கணிணியில் சில முன் தயாரிப்புகளை செய்து கொள்வோமா.........

இந்த வசதியை உபயோகிக்க நம் கணிணியில் டெல்நெட்(telnet) கமாண்ட் enable  செய்யப் பட்டிருக்க வேண்டும்.நீங்கள் விண்டோஸ் எஃஸ்பி உபயோகிப்பவரா,அதிர்ஷ்டவசமாக இந்த வசதி தானாகவே உங்கள் கணணியில் enable செய்யப்பட்டிருக்கும்.நான் விஸ்டா,7 உபயோகிக்கிறேன்,நான் எப்படி இதை enable செய்வது என்கிறீர்களா,வாருங்கள் ஒரு கை தான் பார்த்து விடுவோமே........



* control panel  வாருங்கள்

* program ல் uninstall a program திறங்கள்.

* இடது புறத்தில் turn windows features on or off உள்ளதா.........அதை சொடுக்குங்கள்......

ஒரு சிறிய விண்டோ திறக்கிறதா.

இப்போது telnet client,telnet server(optional) டிக் செய்து ok அழுத்தவும்.அவ்வளவு தான்.உங்கள் கணணியில் டெல்நெட் enable செய்யப் பட்டுவிட்டது......


ஆமாம் இந்த டெல்நெட் என்றால் என்ன என்கிறீர்களா?

TCP/IP ன் மூலமாக ரிமோட் கணிணியுடன் இணைய உதவும் ப்ரோட்டகால் தான் டெல்நெட் ஆகும்.இது  fake email அனுப்பவும் உதவுகிறது.

சரி நேரமாகிக்கொண்டே இருக்கிறது அல்லவா.....வாருங்கள் ஸ்டார் வார்ஸை எழுத்துருவில் பார்க்கலாம்....

ரன் கமாண்டில் cmd டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் பெறவும்.

இப்போது telnet towel.blinkenlights.nl என டைப் செய்து ENTER அழுத்தவும்......திரைப்படம் துவங்கி விட்டதா.......




அப்புறம் என்ன கொண்டாட்டம் தானே!!!

source : cooltips

Tuesday 12 July 2011

Google பிளஸ் பக்கத்தின் முகவரியை இலகுவானதாக மாற்றுங்கள்

                        Google நிறுவனம் அதன் பாவனையாளர்களுக்கு பகுதி பகுதியாக Google பிளஸ் புரோபைலை ஆக்டிவேட் செய்து வருகிறது. எனினும் Google பிளஸ் புரோபைலின் முகவரி பேஸ்புக் முகவரி போன்று நினைவில் வைத்திருப்பதற்கு இலகுவாக இருக்காது. https://plus.google.com/106909594233815460826/posts என்று இருக்கும் முகவரியை gplus.to என்ற தளத்தின் மூலம் http://gplus.to/shanish என மாற்றிவிடலாம்.



இதற்கு gplus.to என்ற முகவரிக்கு சென்று உங்கள் Google பிளஸ் புரோபைலின் முகவரியில் தெரியும் இலக்கத்தையும் கொடுத்தால் இலகுவான முகவரி கிடைத்துவிடும்.

source : 4tamilmedia

Thursday 7 July 2011

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்

உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம் ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். 
இந்த தளங்களில் ஐபி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர், மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.

1) What is my ip address
இந்த தளம் ஐபி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐபி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணினியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.

இந்த தளத்தில் நம்முடைய கணினியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி. எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் அங்கு கொடுத்துள்ளனர். தேவை படுபவர்கள் அதை படித்து ஐபி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர். 

மற்ற தளங்களில் நாம் சென்றாலே நம் கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தில் சில குறியீடு எண்ணை கொடுத்து Show my IP என்ற பட்டனை அழுத்தினால் தான் நம்முடைய கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிய முடியும்.

இந்த தளத்தில் நம் கணினியின் ஐ.பி. எண் மட்டுமின்றி நம்முடைய கணினியில் உபயோகிக்கும் உலவிகள் அதன் வெர்சன்கள் போன்ற விவரங்களும் வருகிறது. 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திலும் நம் கணினியின் ஐபி எண்ணை கண்டறியலாம். 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில விவரங்களும் இதில் கிடைக்கிறது. 

இந்த தளத்தில் நம் ஐபி எண்ணோடு கூடுதல் வசதியாக நம் ஐபி எண்ணை மறைத்து இணையத்தில் உலவும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தளத்திலும் நம் ஐபி எண்ணும் அதன் இருப்பிடத்தை கூகுள் வரைபடம் கொண்டும் காட்டியுள்ளனர். 

thanks : sasi

செல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.

               செல்போன் கம்பெனிகளைப்போல மக்களை சுரண்டும் செயலை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது.இன்று எழுத படிக்கத் தெரியாத சாதாரண மனிதனின் கையில்கூட செல்போனை பார்க்கமுடியும்.கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கிக் கொண்டிருக்கின்றன.காலர் டியூன்,ஜோக்ஸ் என்று எத்தனை கோடி மக்களிடம் பத்து ரூபாயிலிருந்து ஆரம்பித்து மோசடி செய்திருப்பார்கள் என்று கணக்கிட்டுப்பாருங்கள்.இது குறித்து பல மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட பதிவிலிருந்து சில வரிகள் கீழே..

             பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

            செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள்.


                இன்று காலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு ரீசார்ஜ் செய்யப்போனபோது அந்நிறுவனத்தின் அதிகாரி ஒரு இனிக்கும் தகவலை சொன்னார்.இனி மேற்கண்ட அவலங்கள் இருக்காதாம்.ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பதும் பணம் பிடித்துக்கொள்வதும் ஆகிய உரிமை மீறல்கள் இருக்க க்கூடாது என்று தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

                  காலர்டியூன்கள் வைக்க வேண்டுமானால் இனி நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.உதாரணமாக ஒருவர் என்னுடைய அனுமதி இல்லாமல் பணம் பிடித்துவிட்டார்கள் என்று நுகர்வோர் நீதிமன்றம் போனால் செல்போன் கம்பெனி நீங்கள் வேண்டுகோள் வைத்த்தை உறுதி செய்ய வேண்டும்.


                எஸ்.எம்.எஸ் மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவருடைய வேண்டுகோள் இருந்தாலன்றி அவர்களாக ஆக்டிவேட் செய்ய முடியாது.இதற்கு முன்பு பணம் காணாமல் போன பின்னர் போன் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால்தான் நீங்கள் செய்தி சேவை வைத்திருக்கிறீர்கள் என்பார்கள்.இனியும் இப்படி ஏமாற்றி பணம் பறிக்கமுடியாது.

              முன்பே சொன்னது போல கோடிக்கணக்கான பரம ஏழைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.செல்போன் நிறுவன்ங்கள் சுரண்டிக்கொழுத்தன.போட்டியில் கால் ரேட்டை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பிறகு மோசடி வேலை செய்து சம்பாதித்தார்கள்.அதற்கு ஆப்பு வைத்திருக்கிறது ஆணையம்.

Tuesday 5 July 2011

ஓர்குட்டில் புதிய நண்பர்கள்


நீங்கள் ஓர் ஓர்குட் பயனரா? இன்றைய இணையப் பாவனையில் ஓர்குட் பயனர் கணக்கு இல்லாதவர்களே இல்லை எனலாம். இந்த ஓர்குட் சேவையை 2004 ஜனவரி 22 ஆம் நாள் கூகிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

கூகிளில் பணியாற்றும் "ஓர்குட் பியூகோட்டன்" என்பவரே இம்மென்பொருளை உருவாக்கியவர். அதனால் இச்சேவைக்கும் "ஓர்குட்" என்றேப் பெயரிட்டது கூகிள் நிறுவனம்.

நீங்கள் ஓர்குட் பயனர் என்றால், உங்களுக்கும் ஓர்க்குட்டில் பல நண்பர்கள் இருப்பார்கள். அந்த ஓர்குட்டை உருவாக்கியவரான ஓர்குட் பியூகோட்டன் என்பவரையே உங்கள் நண்பராக்கிக்கொண்டால் ...?

சரி! நண்பராக்கிக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவரது புகைப்படங்கள், விபரங்கள், அவரது நண்பர்கள் வட்டம் என்று பல விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். சில நேரம் பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது அல்லவா?

அப்படியானால் இதோ அவருடைய தளத்திற்கானச் சுட்டி.

http://www.orkut.com/Profile.aspx?uid=325082930226142255

கூகிள் நிறுவனத்தை உருவாக்குனர்களான "சேர்ஜி பிறின்" மற்றும் "லாறி பேஜ்" அவர்களுடைய பக்கங்களுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

http://www.orkut.com/Profile.aspx?uid=2990496069118008637

http://www.orkut.com/Profile.aspx?uid=14278765755902856939

நீங்கள் விரும்பினால் கூகிள் நிறுவனத்தில் பணிப்புரியும் பணியாளர்களையும் ஓர்குட்டில் உங்கள் நண்பர்களாக்கிக்கொள்ளலாம். இதோ அவர்களது பக்கத்திற்கான சுட்டிகள்.

http://www.orkut.com/Profile.aspx?uid=11896824899287314528
http://www.orkut.com/Profile.aspx?uid=17148822584528112020
http://www.orkut.com/Profile.aspx?uid=12757970461778905710
http://www.orkut.com/Profile.aspx?uid=18159094750008782722
http://www.orkut.com/Profile.aspx?uid=16388496693262706185
http://www.orkut.com/Profile.aspx?uid=5890672755287005477

இது "மைக்ரோசொப்ட் விஸ்டா 2007" குழுவினர் பக்கத்திற்கானது.

http://www.orkut.com/CommInvite.aspx?cmm=27272039

இது சர்வதேச ஓர்குட்டிற்கான பொதுவானச் சுட்டி, இதை அழுத்தி நேரே உங்கள் தளத்திற்கே செல்லலாம்.

http://www.orkut.com/Profile.aspx???2pid=11731517960896443124

நேரடியாக கிறுக்கள் (Scarp) பக்கத்திற்கு இந்த சுட்டி எடுத்துச்செல்லும்.

http://www.orkut.com/Scrapbook.aspx?2uid=6849219260034274333

நேரடியாக உங்கள் நண்பர்கள் பக்கத்திற்கு செல்ல

http://www.orkut.com/Map.aspx

இங்கே சில பயனுள்ள வசதிகளை செய்துக்கொள்வதற்கானது.

குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் உங்களுக்கு ஓர்குட் ஓர் பயனர் கணக்கிருந்தால் மட்டும் தான் செயல்படும். பயனர் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நேராக குறிப்பிட்டப் பக்கங்களிற்கு உள்நுழையலாம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் (Tamil-English Dictionaries)


ஆங்கிலம் தமிழ் அகராதிகள் அல்லது ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகள் என்பன அகர முதல் வரிசைப்படி ஆங்கில சொற்களை இட்டு அவற்றிற்கு இணையான தமிழ் பொருளை விளக்கும் நூல்கள் ஆகும். இந்த நூல்கள் இன்றைய கணனி உலகில், இலவச இணைய அகராதிகளாக எவரும் எளிதாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. கண்ணிமைக்கும் நேரத்தில் எமக்கு தேவையான ஒரு சொல்லின் பொருளை தெரிந்துக்கொள்ள உதவுகின்றன. அவ்வாறு எமக்கு அடிக்கடி உதவக்கூடிய இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் (Online Tamil-English Dictionaries) பல இணையத்தில் காணப்படுகின்றன.

அவற்றை ஆங்கிலம் கற்போரின் நலன் கருதி இங்கே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

விக்சனரி
இது ஒரு விக்கிசார் திறந்த உள்ளடக்க அகராதி. (இதுவரை இரண்டு இலட்சம் சொற்கள் உள்ளடக்கப்பட்டு, உலக விக்சனரிகளின் தரவரிசையில் 10 இடத்தில் வளர்ந்து நிற்கிறது.) தமிழ் ஆங்கிலம் இருமொழிகளில் சொற்களை உள்ளிட்டு தேடல் பெறும் வசதிகளைக் கொண்டுள்ளது.

கூகிள் ஆங்கிலம்-தமிழ் அகராதி
கூகிள் தமிழ்-ஆங்கிலம் அகராதி
கூகிள் நிறுவனம் தமிழ் வழி தேடல், ஆங்கிலம் வழி தேடல் என இரண்டு இணைய அகராதிகளை வழங்குகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கான ஒலிதக் கோப்புகளும் உள்ளன.

சிங்களம் / தமிழ் இணைய அகராதி
இது ஒரு மும்மொழி இணைய அகராதியாகும். ஆங்கில வழி தேடல் வசதியைக் கொண்டது. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சிங்களம் இருமொழிகளிலும் பொருள் தருகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சிங்கள மொழி சொற்களுக்கான உச்சரிப்புக் கோப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் இணையக் கல்விக்கழக அகராதிகள்
தமிழ் இணையக் கல்விக்கழகம் (முன்னாள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) வழங்கும் பேரகராதிகள். அகரவரிசையில் சொற்களைப் பார்த்தல் வசதியையும் தேடல் வசதியையும் கொண்டுள்ளன. இருப்பினும் அத்தளத்தின் எழுத்துரு தமிழ் ஒருங்குறி (Unicode) அல்லாததாக இருப்பதால் தளத்தைப் பார்வையிடுவதில் சிக்கல் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட அத்தளத்தின் எழுத்துருவை பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்.

லிப்கோ தமிழ் பேரகராதி
தமிழரிடையே நன்கு பிரசித்திப்பெற்ற லிப்கோ அகராதி நிறுவனத்தினர் வழங்கும் தமிழ் இணையப் பேரகராதி. தமிழ் வழி தேடல் வசதியைக் கொண்டது.

PALS e-Tamil Dictionary
இது தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி ஆகும். இந்த அகராதியில் 49000கும் அதிகமான சொற்கள் உள்ளன. உலாவும் மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டது. கணணியில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடியது. (மேலதிக விபரங்களை தளத்தில் பார்க்கவும்)

சென்னை பல்கலைக்கழக தமிழ்-ஆங்கில அகராதி
சென்னை பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதி
நா. கதிர்வேலுபிள்ளை தமிழ்மொழி அகராதி
மேலுள்ள மூன்று அகராதிகளும் தமிழ் களஞ்சியம் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளவைகளாகும்.

DSAL அகராதி (J. P. Fabricius 1972)
DSAL அகராதி (Na Kadirvelu Pillai 1928)
DSAL அகராதி (David W McAlpin 1981)
DSAL அகராதி (University of Madras 1924-1936)
DSAL அகராதி (Miron Winslow 1862)
மேலே உள்ளவை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகம் வழங்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளுக்கான அகராதிகள் வரிசையில், இணைக்கப்பட்டுள்ள பழமையான தமிழ்-ஆங்கில அகராதிகள் ஆகும்.

தமிழ்கியூப் அகராதி
தமிழ், ஆங்கிலம் இருவழி தேடல் வசதியைக் கொண்டுள்ளது. அகரவரிசையில் சொற்களைப் பார்வையிடவும் முடியும்.

ஆங்கிலம்-தமிழ்-யேர்மன் மும்மொழி அகராதி
ஆங்கிலம்> தமிழ், தமிழ்>ஆங்கிலம், யேர்மன்>தமிழ், தமிழ் யேர்மன் என நான்கு வழி தேடல் வசதிகளைக் கொண்டது. அகரவரிசையில் சொற்பட்டியல்களாகவும் காணலாம்.

தமிழ்ப் படி அகராதி (ஆங்கில வழி தேடல்)

Tamil English Online Dictionary (இருமொழி விளக்கம்)

அகரமுதலி Tamil Lexicon (தமிழ் வழி தேடல்)

அகராதி (இருமொழி தேடல் அகராதி)

புதிய அகராதி (தமிழ் வழி தேடல்)

தமிழ் சங்கதி (பட்டியல் வழி காணல் மற்றும் தேடல் வசதிகள் கொண்டவை.)

My Tamil Dictionary (இரு வழி தேடல்)

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (புதிய முயற்சி)

சர்ச்கோ (தமிழ் வழி தேடல்)

TamilEnglishOrg (தமிழ்- தமிழிஷ் வழி தேடல்)

UD English (ஆங்கில வழி தேடல்)

வெப்துனியா (ஆங்கில வழி தேடல்)

LEXILOGOS English-Tamil Dictionaries (அகராதிகளின் தொகுப்பு)

ஆங்கிலோ-தமிழ் அகராதி (1876 நூல்)
1876ல் Rev. P. Percival என்பவரால், அக்காலச் சென்னை ஆளுநரின் தலமையில் வெளியிடப்பட்ட (Anglo-Tamil Dictionary) அகராதி. மின்னூல் வடிவம்.

English-Tamil Dictionary 1852 (மின்னூல் வடிவம்)

பதிவிறக்கிப் பயன்படுத்தக்கூடிய அகராதிகள் (Free Downloadable Dictionaries)
-------------------------------------------------------------------------------------
தமிழ்நெட் ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF
4700 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF
3500 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

Scribd Tamil-English Words PDF
ஆங்கிம் - தமிழ் சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

எமது தளத்தின் ஆங்கிலம்-தமிழ் சொல் தேடு பொறி ஊடாகவும் சொற்கள் பற்றிய பாடங்களை தேடிப்பெறலாம். (இருமொழி தேடல் வசதியுண்டு)

ஆங்கிலம் கற்போர் மட்டுமன்றி, ஆங்கிலம் கற்றுச் சிறந்தோருக்கும் ஆங்கில அகராதிகள் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றுதான். ஆங்கில மொழியில் அனைத்து சொற்களையும் அறிந்தவர் என்று எவரும் இருக்க முடியாது. (தாய் மொழி ஆங்கிலேயரானாலும்) அந்தளவுக்கு ஆங்கில மொழியின் சொல்வளம் பெரியது. இதுவரை ஆங்கில சொற்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்து செல்கின்றது. ஒரு நாளைக்கு 14.7 எனும் விகிதத்தில் புதிய சொற்களும் சேர்ந்துக்கொள்கின்றன. அதிலும் ஒரே சொல் பல வரைவிலக்கணங்களைக் கொண்டவைகளும் நிறையவே உள்ளன. எனவே ஆங்கில அகராதிகளின் உதவி எல்லோருக்கும் அத்தியாவசியமானதாகவே இருக்கும்.

குறிப்பு: ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு வழங்கப்பட்டிருக்கும் தமிழ் பொருள், வெவ்வேறு அகராதிகளில் வெவ்வேறாக வேறுப்பட்டவைகளாக இருக்கலாம். அவை அந்தந்த அகராதிகளையே சாரும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun