Pages

Tuesday 21 June 2011

MP3 பைல்களின் குவாலிட்டியை மாற்ற இலவச மென்பொருள்

பெரும்பாலும் ஆடியோ பைல்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப் படுத்தப் படுகிறது. நம்மிடம் சில MP3 ஆடியோ பைல்கள் தரம் குறைந்து இருக்கும் அந்த வகை பைலை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி (சற்று தொங்கலாக)  இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம். மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.

  • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • தற்பொழுது உங்களுக்கு வரும் Zip பைலை Extract செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற பைலை ஓபன் செய்து கொள்ளவும்.
  • இந்த மென்பொருளை நாம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • குறிப்பிட்டு காட்டியுள்ள பகுதியில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.
  • கடைசியில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இது போன்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களின் பழைய பைலின் அளவும் மாற்றம் செய்த பைலின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய MP3 Quality Modifier
source : sasikumar

Monday 20 June 2011

தினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக உங்களின் ஈமெயிலுக்கே வரும்

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள். ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய ஈமெயில் கொடுத்து டவுன்லோட் செய்தால் அந்த ஈமெயில்களை பல spam கம்பனிகளுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத ஈமெயில்கள் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும் ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.
அதெல்லாம் சரிப்பா நாங்களே சும்மா பொழுது போக்குக்கு கணினிய உபயோகிக்கிறோம் அதுக்கு நாங்க மென்பொருளை காசு கொடுத்து ஏன் வாங்க வேண்டும் யாராவது அந்த மென்பொருட்களை சுமா கொடுத்தா சொல்லுப்பா நாங்க டவுன்லோட் பண்ணிக்கிறோம் என நீங்கள் கூறினால் உங்களை போன்றவர்களுக்கு ஒரு உபயோகமான தளம் உள்ளது. இந்த தளம் மென்பொருட்களை உங்கள் மெயிலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் தெரியாதவர்களுக்காக.

  • இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுக படுத்துவார்கள்.
  • அந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள் அதற்குள் அந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • 24 மணி நேரம் கழித்து டவுன்லோட் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
  • இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் ஈமெயிலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது ஈமெயிலுக்கே அனுப்பி விடுவார்கள் அந்த லிங்கில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இன்றைய இலவச மென்பொருள் 
  • டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் காப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
  • ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
  • இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் ஈமெயிலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மெயிலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.
இந்த பயனுள்ள தளத்திற்கு செல்ல - www.giveawayoftheday.com

இதை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள் அவர்களும் பயனடையட்டும்.

thanks : sasikumar

இணைய பக்கங்களை PDF வடிவில் சேமித்திட இலவச மென்பொருள் !

    

பல இணைய தளங்களை நாம் பார்வயிடும்பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று நாம் கருதுவதுண்டு .ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு .இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .Primo pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும் .எந்த இணைய பக்கத்தை pdf ஆக சேமிக்க வேண்டுமோ அந்தபக்கத்தை திறந்து கொண்டு .File மெனுவில் Print ஐ அழுத்த வேண்டும் .பின்பு வரும் பெட்டியில் படத்தில் காண்பித்துள்ளவாறு Primo pdf என்பதை தேர்வு செய்யவேண்டும் .அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .செயல்படுத்தி பயனடையுங்கள் .மென்பொருளை தரவிறக்க  சுட்டி

 பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இடவும்.
 source : bala

Sunday 19 June 2011

AUTORUN வைரசை அகற்ற எளிய வழி!

கணினியை பயன்படுத்துவோர் பலருக்கும் AUTORUN வைரசை பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும் .இது பெரும்பாலும் FLASHDRIVE கள் மூலமாக பரவக்கூடியது.

      இது பல்வேறு வைரஸ் தாக்குதல் நமது கணினியில் நிகழ அடிப்படையானது.இதை சாதாரண முறையில் நமது கணினியில் இருந்து அழிக்க முயன்றால்  முடியாது.இதை நீக்க சில PROGRAM களும் உள்ளன. இருந்தாலும் SOFTWARE எதுவும் இல்லாமல் இதை கணினியில் இருந்து நீக்கலாம்.
      
     முதலில் உங்கள் கணினியில் NOTEPAD ஐ திறந்துகொள்ளுங்கள் .அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த CODE  ஐ அப்படியே COPY செய்து NOTEPAD ல் PASTE செய்யுங்கள் .

cd\
c:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
d:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
e:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
f:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
g:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
h:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
i:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
j:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
k:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
l:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
m:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
n:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
o:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
p:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
q:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
r:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf
s:
attrib -r -s -h autorun.inf
del autorun.inf  


       இந்த DOCUMENT ஐ ஏதாவது ஒரு பெயரில் .bat என்று முடியும் வகையில் சேமியுங்கள் .(உதாரணம் filename.bat) இப்போது நீங்கள் சேமித்த அந்த கோப்பை RUN செய்யுங்கள் .இப்போது உங்கள் கணினியில் இருந்து autorun.inf  வைரஸ் நீக்கப்பட்டிருக்கும் .
thanks : bala

Friday 17 June 2011

இந்திய மொபைல்களுக்கு Anonymous SMS இலவசமாக அனுப்ப

இப்பொழுது மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. பெரியவர்கள் முதல் பள்ளிக்கு செல்லும் சிறியவர்கள் வரை அனைவரும் போன்களை உபயோகிக்கின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் மொபைல் போன்களில் விரும்பி உபயோகிப்பது SMS (Short Messaging Service) என்ற குறுஞ்செய்தி வசதியை தான்.

இதற்காகவே நிறைய பேர் மொபைல் போன்களை வாங்குகின்றனர். இது போன்று SMS அனுப்பினால் காசு போவதோடு நம் நம்பரும் அனுப்புவர்களுக்கு தெரிந்துவிடும். பசங்கள சும்மா வெறுப்பேத்த நம்முடைய மொபைல் போன் நம்பரை மறைத்து எப்படி Anonymous SMS அனுப்புவது என்று காண்போம். இந்த சேவை முற்றிலும் இலவச சேவையே. 

உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

  • இந்த சேவையை Smsti தளம் நமக்கு வழங்குகிறது. இதில் நீங்கள் உறுப்பினர் ஆகவேண்டிய அவசியமில்லை.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் ஒரு சிறிய விண்டோ இருக்கும் அதில் நீங்கள் நீங்கள் SMS அனுப்பவேண்டிய இந்திய நம்பரை முதல் கட்டத்தில் கொடுங்கள்
  • அடுத்து கீழே இருக்கும் கட்டத்தில் உங்களுடைய செய்தியை டைப் செய்து கொள்ளுங்கள்.
  • இதில் 160 character வரை சேர்க்கலாம்.
  • முடிவில் கீழே இருக்கும் Send பட்டனை அழுத்துங்கள்.

  • Send பட்டனை அழுத்தியவுடன் அடுத்து உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி வரும் அதில் மட்டும் அந்த பக்கத்தில் உள்ள verification நம்பரை சரியாக கொடுத்து கீழே உள்ள Agree to Terms என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் சம்ஸ் நீங்கள் கொடுத்த நம்பருக்கு சென்று விடும். 

  • இந்த முறையில் நீங்கள் ஒரு நாளைக்கு எதனை முறையாவது SMS இலவசமாக அனுப்பி கொள்ளலாம்.
மீண்டும் கூறுகிறேன் உங்களுடைய நம்பர் தெரியாது என்று ஏதாவது விபரீத SMS அனுப்பலாம் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அந்த எண்ணத்தை மறந்து விடுங்கள். நம்பர் தெரியாதே தவிர நீங்கள் உபயோகிக்கும் கணினியின் அனைத்து விவரங்களும் இதில் சேமிக்கப்படும் அதை வைத்து உங்களை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை மறக்க வேண்டாம்.
thanks : sasi

Thursday 16 June 2011

கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த

கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள்  நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:
  • Word documents (.doc, .docx, .docm, .rtf)
  • Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • Zip or RAR archives (.zip, .rar)
  • Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • PDF documents (.pdf)
  • Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • Music (.mp3, .wav)
இப்படி பல வகையான பைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.

உபயோகிக்கும் முறை:
  • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பழுதான பைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பைல் ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய பைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த மென்பொருளால் குறிப்பிட்ட பைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான பைலை அனுப்பினால் அவர்கள் அந்த பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

Download Link - File Repair
thanks : sasikumar

Tuesday 14 June 2011

WINDOWS 7 :சில பயனுள்ள உதவிகள் !

விண்டோஸ்  7  ல் XP  ல் இல்லாத பல்வேறு வசதிகள் இருப்பதை நாம் அறிவோம் .அவற்றில் சில பயனுள்ள வசதிகளை பற்றி இப்போது பார்க்கலாம் .

கணினி முன்பாக வெகுநேரம் உட்கார்ந்து பணியாற்றும்போது கண்களில் வலி ஏற்படலாம் .முக்கியமாக பதிவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது .நாள் முழுவதும் கணினி முன் உட்காருவதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணியக்கூடிய சூழ் நிலை வரலாம் .

கண்களுக்கு பாதிப்பில்லாமல் கணினியை பயன்படுத்த விண்டோஸ் 7  ல் ஒரு அருமையான வசதி உள்ளது .

கீ போர்டில் Shift+Left Alt+Print Screen ஆகிய கீகளை சேர்த்து அழுத்துவதன் மூலம் கணினி திரை கருப்பாக மாறிவிடும் . தேவையான பகுதிகள் மட்டும் கண்ணுக்கு தெரியும்.இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம் .இதை disable செய்ய மீண்டும் அதே கீகளை அழுத்தவும் .

Windows 7 ல் இன்னொரு அருமையான வசதி நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு புரோகிராமுக்கும் நாம் விரும்பிய short cut key அமைக்கலாம் .

உதாரணமாக போட்டோஷாப்புக்கு ஷார்ட்கட் கீ அமைக்க வேண்டுமெனின் போட்டோஷாப் ஷார்ட் கட் ஐகானில் ரைட் கிளிக் செய்து properties தேர்வு செய்யவும் .இப்போது shortcut tab ல் shortcut key என்னுமிடத்தில் Ctrl+Alt+E இது போல வேறு எழுத்துக்களை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .அல்லது Function கீகள் அதாவது F1  F6  இது போன்ற கீகளை பயன்படுத்தியும் ஷார்ட் கட் அமைக்கலாம் .

விண்டோஸ் 7  ல் பலரும் விரும்பாத ஒரு வசதி டாஸ்க் பாரில் அனைத்து விண்டோக்களும் ஒரே டேபில் இணைந்துவிடும் .

இவை தனி தனி TAB ஆக அமைய ஒரு SETTING .TASK BAR PROPERTIES தேர்வு செய்து Task bar buttons ல் never combine ஐ தேர்வு செய்து வெளியேறவும் .இப்போது அனைத்து விண்டோக்களும் தனி தனி டேபில் வந்திருப்பதை காணலாம் .
courtesy : bala

ஆங்கில இலக்கணம் கற்கலாமா!

           
                            Grammar Book என்ற பெயரில் இணைய தளம் http://www.grammarbook.com/english_rules.asp என்ற முகவரியில் இயங்குகிறது. முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன.

                         ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, மற்றும் the Grammar Blog என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் உள்ள Grammar Blogல் பலவகையான இலக்கண விளக்கங் கள் தரப்பட்டுள்ளன.

                       வீடியோ பிரிவில், சிறு சிறு பாடங்கள் தரப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் எடுத்துக்காட்டுக்களைக் காட்டிலும் இவற்றில் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நாம் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகின்றன. மொத்தம் 68 வீடியோ கிளிப்கள் உள்ளன. ஆங்கில மொழி ஆக்கத்திற்கான விதிமுறைகளை இவை விளக்குவது எளிதாக உள்ளது.

                       ஆங்கில மொழியை நன்கு கற்றுப் பயன்படுத்த திட்டமிடுவோருக்கும், கற்றவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்குவதற்கும் இது ஓர் அருமையான தளம்.

courtesy : dinamalar

Monday 13 June 2011

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் VLC Media Player புதிய வெர்சன்- V1.1.10

VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் டீபால்ட்டாக விண்டோவ்ஸ் மீடியா பிளேயர் இன்ஸ்டால் செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும். இந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.10 வந்துள்ளது. ஆகவே இதன் முந்தைய வெர்சனை உபயோகிப்பவர்கள் இந்த புதிய வெர்சனை டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.  
சப்போர்ட் செய்யும் வீடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG-1/2, 
  • DIVX (1/2/3),  
  • MPEG-4 ASP, DivX 4/5/6, XviD, 3ivX D4
  •  H.261, 
  • H.263 / H.263i, 
  • H.264 / MPEG-4 AVC, 
  • Cinepak, 
  • Theora
  • Dirac / VC-2
  • MJPEG (A/B)
  • WMV 1/2
  • WMV 3 / WMV-9 / VC-1
  • Sorenson 1/3 (Quicktime)
  • DV (Digital Video)
  • On2 VP3/VP5/VP6
  • Indeo Video v3 (IV32)
  • Indeo Video 4/5 (IV41, IV51)
  • Real Video 1/2, Real Video 3/4
 சப்போர்ட் செய்யும் ஆடியோ பார்மட்டுக்கள்:
  • MPEG Layer 1/2
  • MP3 - MPEG Layer 3
  • AAC - MPEG-4 part3
  • Vorbis
  • AC3 - A/52 (Dolby Digital)
  • E-AC-3 (Dolby Digital Plus)
  • MLP / TrueHD">3
  • DTS
  • WMA 1/2
  • WMA 3 1
  • FLAC
  • ALAC
  • Speex
  • Musepack / MPC
  • ATRAC 3
  • Wavpack
  • Mod (.s3m, .it, .mod)
  • TrueAudio (TTA)
  • APE (Monkey Audio)
  • Real Audio 2
  • Alaw/µlaw
  • AMR (3GPP)
  • MIDI 3
  • LPCM
  • ADPCM
  • QCELP
  • DV Audio
  • QDM2/QDMC (QuickTime)
  • MACE
இப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி பெற்று கொள்ளவும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 


 
courtesy : sasikumar

விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்

                தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

                    தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

                   மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது. அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது. புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

                  அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.

                       விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

                      புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.

                      இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.

                     விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Courtesy : dinamalar

Tuesday 7 June 2011

யூ-ட்யூப் பார்க்கும் 300 கோடி பேர்

                தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய்ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அண்மையில் தன் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், தன் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை, நாளொன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன்னொரு வகையில் பார்த்தால், உலகின் பாதி மக்கள் தொகை, யு–ட்யூப்பில் ஒரே நேரத்தில் காட்சிகளைக் கண்டு களிப்பதாகத் தெரிகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இது 50% கூடுதலாகும். இதிலிருந்து மக்கள் தகவல்களைக் காட்சிகளாகவே பார்த்து ரசிக்க விரும்புகின்றனர் என்று தெரிகிறது.

                   இந்த தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்லோட் செய்யப்படும் வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்த்தால், இரண்டு நாட்கள் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் வீடியோ காட்சிகள் அப்லோட் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Courtesy : dinamalar

Monday 6 June 2011

பயர்பாக்ஸ் 5 சோதனைப் பதிப்பு

                   முன்பே திட்டமிட்டு அறிவித்தபடி, வரும் ஜூன் 21 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு5 வெளி வர இருக்கிறது. அதற்கு முன்னதாக, அதன் சோதனைப் பதிப்பு அண்மையில் மே 17 அன்று வெளியிடப் பட்டது. இதில் சி.எஸ்.எஸ். அனிமேஷன் சப்போர்ட் செய்யப்படுவது புதிய வசதியாகும். ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி இதனை மேற்கொண்டுள்ளது. இனி வரும் அனைத்து பயர்பாக்ஸ் பிரவுசர்களில், நிரந்தரமாக ஒரு ஹோம் டேப், பிரவுசரிலேயே இணைக்கப்பட்ட ஒரு பி.டி.எப். ரீடர், இணைய தள மெனு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9ல் இருப்பது போன்ற ஜம்ப் லிஸ்ட் ஆகியவை இருக்கும்.

              இவற்றில் இருக்கும் இன்னொரு சிறப்பான வசதி, இது போன்ற சோதனை தொகுப்பு களுக்கும், இறுதி தொகுப்பிற்கும் இடையே மாறிக் கொள்ள வழி தரும் சேனல் ஸ்விட்சர் தான். புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்திடாமல், இதன் மூலம் அப்டேட் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பிரவுசரில் “About” பக்கம் சென்று, “Change” என்ற லிங்க்கில் கிளிக் செய்திட வேண்டும். இதில் கிடைக்கும் மெனுவில் “Apply and Update” என்பதைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்தால் போதும். ஆனால் இதனைப் பயன்படுத்தி, பழைய தொகுப்பிற்கு மாற முடியாது. எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 4க்கு மாற முடியாது.


             பதிப்பு 5ன் யூசர் இன்டர்பேஸ் ஏற்கனவே வெளிவந்த பயர்பாக்ஸ் 4ன் இன்டர்பேஸ் இடைமுகத்தினை அப்படியே கொண்டுள்ளது. கூகுள் தன் குரோம் பிரவுசரை, ஒவ்வொரு எட்டு வாரத்திற்கும் ஒரு முறை புதுப்பிக்கிறது. புதிய வசதிகளைத் தருகிறது. மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தான் புதிய வசதிகளை இணைக்க விரும்பும் போதெல்லாம் புதுப்பித்துக் கொள்கிறது. பயர்பாக்ஸ் பதிப்பு 3க்கும் 4க்கும் இடையே நான்கு ஆண்டு இடைவெளி இருந்தது. ஆனால் 4க்கும் 5க்கும் இடையே மூன்று மாதங்கள் இடைவெளி மட்டுமே உள்ளது. 


          இதே போல மைக்ரோசாப்ட் தன் புதிய பதிப்பினை வெளியிட்டவுடனேயே, அடுத்த பதிப்பு வெளியிடப்பட இருக்குதேதியினை அறிவிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனமும், ஆப்பரா நெக்ஸ்ட் என்று அடுத்த பிரவுசரினை உடனேயே அறிமுகப் படுத்துகின்றனர். இதற்குக் காரணம் பிரவுசர் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டிதான்.
ஆனால், மொஸில்லா இந்த போட்டியில் மிக மிக முன்னணியில் ஓடுகிறது. ஆறு வாரங்களுக்கு ஒரு புதிய பதிப்பினைக் கொண்டு வர இருக்கிறது. ஆகஸ்ட் 9 அன்று பதிப்பு 6 வெளி வர உள்ளது. இப்படியே போனால், இந்த ஆண்டின் ,2011, இறுதியில், பயர்பாக்ஸ் பதிப்பு 9 வெளியாகும். 
மேலும் இது குறித்த தகவல்களுக்கும், சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும்http://www.mozilla.com/enUS/firefox/channel/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தினைப் பார்க்கவும். 



courtesy : dinamalar

கூகுள் மொபைல் மணிபர்ஸ்

               சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடைக்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக அந்தக் கடையில் பயன்படுத்திக் கொள்ளலாம். 
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த சிஸ்டத்தின் அடிப்படையில் இயங்கும் தொழில் நுட்பத்தின் பெயர் NFC (Nearfield communication). இதன் அடிப்படையில் இயங்கும் இரு சிப்களை, இரண்டு சாதனத்தில் அமைத்து அருகே வைத்து இயக்குகையில், அவை இரண்டும் தாங்களாகவே, தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். கிரெடிட் கார்ட் தகவல்கள், ட்ரெயின் டிக்கட், கூப்பன்களில் உள்ள பார் கோட் தகவல்கள் போன்ற தகவல்களை எளிதாக இவை கையாளும். இந்த சிப்களை இனி வெளியாகும் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களிலும் வைத்திட கூகுள் முடிவு செய்துள்ளது. 


                      முதலில் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல் படும் நெக்சஸ் எஸ் மொபைலில் இது செயல்படும். முதல் முறையாக அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் நியூ யார்க் நகரங்களில் இது சோதனை செய்யப்படுகிறது. பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நகரங்களுக்கு விரிவாக்கப்படும். பின்னர், அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்படும். அமெரிக்காவில் பல வர்த்தக நிறுவனங்களும், கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கென கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தங் களை மேற்கொள்கின்றன. பன்னாட்டளவில் மூன்று லட்சம் வர்த்தக நிறுவனங்கள் இதற்கு போட்டி போட்டுக் கொண்டு முன்வந்துள்ளதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. சாம்சங், மோட்டாரோலா, எச்.டி.சி. நிறுவனங்கள் தங்கள் மொபைல் போன்களில் இதனை அறிமுகப்படுத்த ஒத்துக் கொண்டுள்ளன. 


                    ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தினை Microsoft, Visa, Sony, Nokia and AT&T ஆகிய நிறுவனங்கள் சப்போர்ட் செய்து வருகின்றன. என்.எப்.சி. தொழில் நுட்பம் இனி ஸ்மார்ட் போன்களில் ஒருங்கிணைந்த ஒரு வசதியாக கருதப்படும். இனி ட்ரெயின், பஸ் அல்லது விமானப் பயணங்களுக்கு, இன்டர்நெட் மூலம் டிக்கட் எடுத்து, அதனை அச்செடுத்து, மறந்துவிடாமல் எடுத்துச் செல்லும் வேலை எல்லாம் இருக்காது. மொபைல் மூலமாகவே இன்டர்நெட்டில் டிக்கட் எடுத்து அதனைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், ஏறிச் செல்லும் வாகனங்களில் கதவுகளில் பதிந்து வைக்கப் பட்டுள்ள சாதனத்தின் முன், மொபைல் போனை ஆட்டிவிட்டு உள்ளே செல்லலாம்.கடைகளில் பொருட்களை வாங்கிய பின்னர், மொபைல் போனை காசு வாங்கும் இயந்திரத்தின் முன் அசைத்துவிட்டு, ரசீது பெற்று பொருளை எடுத்துச் சென்றுவிடலாம். 

                   பணம் மட்டுமின்றி, வாகன ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை போன்றவற்றையும் இதில் கொண்டு வர கூகுள் திட்டமிடுகிறது.
இதில் மோசடி நடக்காமல் இருக்க அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கூகுள் கொண்டு வந்துள்ளது. மொபைல் போனில் இது இருந்தாலும், போன் இயக்கத்துடன் கலக்காமல் தனி சிஸ்டம் மற்றும் மெமரியில் என்.எப்.சி. சிப் இயங்கும். போன் இயக்கத்திற்கென ஒரு PIN எண்ணும், மொபைல் மணி பர்ஸுக்கென இன்னொரு PIN எண்ணும் பயன்படுத்த வேண்டும். 

                  கூகுளின் இந்த புதிய நிதி வர்த்தக நடவடிக்கை அதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மற்றும் அவை இயங்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்து பவர்களை அதன் வளையத்திற்குள் கொண்டு வரும். வர்த்தகத்தில் ஈடுபடாமலேயே, பன்னாட்டளவில் பெரிய வர்த்தக நிறுவனமாக கூகுள் மாறும். இந்த துறையில் தங்களின் பங்கினையும் மேற்கொள்ள நிச்சயம் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்பத்தினைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். அதிக எண்ணிக்கை யில் நிறுவனங்கள் வந்தால், நமக்கு லாபம் தானே. 


Courtesy : dinamalar

Sunday 5 June 2011

facebook ல் பிரிந்து சென்ற நண்பரை கண்டுபிடியுங்கள்


தெரிந்து கொள்ளாமல் நட்பாவது, தெரிந்ததனால் விலகிப் போவது. Facebook ன் எழுதப்படாத விதி இது. ஒரு நாள் பார்க்கும் பொழுது இருந்த நண்பர்களின் எண்ணிக்கை அடுத்த நாள் இல்லாமல் போகலாம். Facebook யார் விலகினார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரிவிக்காது. ஆனால் இதை வேறு முறையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு https://www.twentyfeet.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதில் நீங்கள் உறுப்பினராக இணைந்த பின்னர் உங்களுடைய Facebook அக்கவுண்டை இதில் இணைக்கவும். யாரேனும் நண்பர்கள் உங்களை விட்டு விலகினால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அறிவிப்பு வந்துவிடும். ஒருவேளை அந்த நபர் Facebook ல் இருந்தே கூட விலகி இருக்கலாம்.
மேலே கூறிய முறை உங்களுக்கு புரியவில்லை எனில்http://apps.facebook.com/twentyfeet/ இந்த தொடர்பை பயன்படுத்தவும்.
குறிப்பு : இதன் மூலம் Facebook ல் ஏதாவது ஒன்றை மட்டுமே இலவசமாக எப்பொழுதும் கண்காணிக்க முடியும். அதாவது உங்களுடைய நண்பர் எண்ணிக்கை மட்டும் கண்காணிக்க விரும்பினால், அதற்கு மேல் உங்கள் Group அல்லது Fan Page ஆகியவற்றை கண்காணிக்க $2.49 கட்டணமாக ஒரு வருடத்துக்கு செலுத்த வேண்டும். எனினும் 30 நாளைக்கு எல்லா வசதிகளையும் பெறலாம் அதற்கு மேல் உபயோகப் படுத்தத்தான் மேல் சொன்ன விதிமுறை.
முக்கிய குறிப்பு : ஒரு அக்கவுண்ட்டிற்கு ஏதாவது ஒன்றை கண்காணிக்கலாம் என்றால். ஒவ்வோரு அக்கவுண்டிற்கும் ஒன்றை கண்காணிக்கலாம் தானே. பல மின்னஞ்சல் (e-mail) முகவரி வைத்திருப்பவர்களுக்கு இந்த யுத்தி உதவும்.
courtesy : tamiltech

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவசங்கள்

                              டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது. இதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு நேர் மாறாக, கூகுள் ஒரு ராபின்ஹூட் போல வேறு வர்த்தக வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, மக்களுக்குப் பல வசதிகளை இலவசமாகத் தந்து வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சாப்ட்வேர் வசதிகளை இலவசமாகத் தந்து வருவது பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

1. ஹாட்மெயில்: 

                               மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய இமெயில் சேவை. இணையத்தில் முதல் முதலாக இமெயில் சேவையைப் பெரும் அளவில் இலவசமாக வழங்கிய நிறுவனம் ஹாட் மெயில். பின்னரே, இதனை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி தன தாக்கிக் கொண்டது. தொடர்ந்து ஹாட் மெயில் சேவைகள் இலவசமாகவே கிடைத்து வருகின்றன. மேலும்http://office.microsoft.com/enus/outlookhelp/microsoftofficeoutlookhotmailconnectoroverviewHA010222518.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் இலவசமாகக் கிடைக்கும் Microsoft Outlook Hotmail Connector மூலம், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் ஹாட் மெயில் அக்கவுண்ட்களை இணைக்கலாம். 

2. விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் (Windows Live Essentials):

                              விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பல டூல்களை இணைத்தே வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் பலர், இந்த இலவச டூல்கள் டிஸ்க் இடத்தைக் கபளீகரம் செய்கின்றன என்று குற்றம் சாட்டியதால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த இலவச டூல்களில் பல எடுக்கப்பட்டன. இவை அழிக்கப்படாமல், மொத்தமாக விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக, இலவசமாக டவுண்லோட் செய்யும் வகையில், மைக்ரோசாப்ட் சர்வரில் வைக்கப் பட்டுள்ளது. இந்த இலவச தொகுப்பில், விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail), விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger), விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh), விண்டோஸ் லைவ் ரைட்டர் (Windows Live Writer), போட்டோ காலரி (Photo Gallery), விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் (Windows Live Movie Maker), விண்டோஸ் பேமிலி லைவ் சேப்டி (Windows Live Safety), ஆகியவை தரப்படுகின்றன. 
விண்டோஸ் லைவ் மெயில், ஒரு டெஸ்க்டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இமெயில் அக்கவுண்ட்களை இயக்கலாம். 
விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மெசேஜ் டூல். இதன் மூலம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட் ஏற்றுக் கொள்ளும் எந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவையின் அக்கவுண்ட் கொண்டிருந் தாலும், அவர்களுடன் சேட் செய்திடலாம். இதனை இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்வதைக் காட்டிலும் ஆன்லைன் தொடர்பு வலை என்று விரிக்கலாம்.
விண்டோஸ் லைவ் மெஷ், உங்களின் பல கம்ப்யூட்டர்களின் டேட்டாவை ஒருங்கிணைக்க உதவுகிறது. லைவ் மெஷ் இயங்கும் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களையும் இது இணைக்கிறது.


விண்டோஸ் லைவ் ரைட்டர்: 

                               வேர்ட் ப்ரெஸ் மற்றும் ஷேர் பாய்ண்ட் போன்ற ப்ளாக்குகள் எனப்படும் வலைமனை களில் பதிவதற்கான டேட்டாவினை அமைப்பதற்கு விண்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுகிறது. நாம் விரும்பும் வகையில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், இணைப்பதற்கான படங்கள், வீடியோ கிளிப்கள் போன்றவற்றை இணைக்க இது பயன்படுகிறது.

போட்டோ காலரி

                              வகை வகையான ஆல்பங்களில் நம் போட்டோவினை ஒட்டி, ஷெல்ப்களில் அடுக்கி வைக்கின்ற காலம் போய்விட்டது. நம் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, நம் போட்டோக்களை ஆல்பங்களாக வைத்து வருகிறோம். இதனாலேயே, போட்டோக்களை இணைய சர்வர்களில் வைத்திட பல நிறுவனங்கள் இலவச இடம் அளித்து வருகின்றன. அது மட்டுமின்றி, போட்டோக்களை நம் விருப்பத்திற்கேற்ப இணைக்கவும், மாற்றி அமைக்கவும் டூல்களையும் இந்த தளங்கள் தருகின்றன. மைக்ரோசாப்ட் தரும் போட்டோ காலரி இந்த வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.

விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்: 

                              ஹை டெபனிஷன் வீடியோ காட்சிகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகமான அளவில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இதனாலேயே இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு பட இயக்குநர் எனத் தங்களை எண்ணிக் கொண்டு, படங்களை உருவாக்கி மன நிறைவு கொள்கின்றனர். விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த எண்ணம் கொண்டவர் களுக்கு மிகவும் உதவுகிறது. டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது, பின்னணி இசை சேர்ப்பது என்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்.

விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி

                              இணையத்தில் உலாவ விரும்பும் நம் குழந்தைகளைக் கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நமக்கு மிகவும் உதவுவது இந்த விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி. இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தை கள் பார்க்கும் இணைய தளங்கள் மட்டுமின்றி, இமெயில்களைக் கூடக் கட்டுப்படுத்தலாம்.

3. விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ்

                             கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் மெதுவாக கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். அவரவர் கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் தொகுப்பு களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வதனைக் காட்டிலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணைய சர்வர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். இவ்வாறு உருவாக்கும் பைல்களையும் இணையத்திலேயே சேவ் செய்து, தேவைப்படுகையில் எடுத்துப் பயன்படுத்த விண்டோஸ் லைவ் ஸ்கை உதவுகிறது. நம்முடைய முக்கிய டேட்டா பைல்களை இதில் பேக் அப் ஆக சேவ் செய்து வைக்கலாம்.
 4. ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ்: 
                            மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இணையத்தில் இருந்தவாறே பெற்று பயன்படுத்த ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ் உதவு கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் இன்ஸ்டால் செய்ய வில்லை என்றாலும், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் பைல்களை, இதன் மூலம் உருவாக்கலாம். இவை எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகளில் கிடைக்கும் பார்மட்களிலேயே உருவாக்கப்படுவது இதன் சிறப்பாகும்.

5. செக்யூரிட்டி எசன்சியல்ஸ்: 

                           ஒவ்வொரு விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் செக்யூரிட்டி சாப்ட்வேர் ஒன்று இப்போது அத்தியா வசியத் தேவையாக ஆகிவிட்டது. வைரஸ், வோர்ம், பிஷிங் அட்டாக், மால்வேர் என பலவகை ஆபத்துகள் நம் பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுற்றி வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஒரு பயர்வால் கிடைக்கிறது. இருப்பினும் முழுமையான ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும் என விரும்புவோர், மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.
மேலே சொல்லப்பட்ட இலவச மைக்ரோசாப்ட் டூல்களில் ஒரு சிலவற்றை ஏற்கனவே நீங்கள் அறிந்து செயல்படுத்தி வரலாம். மற்றவையும் அதே போல சிறந்த பயன்களைத் தருபவை தான். ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தால் அதன் பலன்களை அனுபவிப்பீர்கள். 



Courtesy: Dinamalar

Saturday 4 June 2011

How to make Word 2007 always save in 2003 format?

Not everyone has updated to the 2007 edition of Microsoft Office. So a problem arises as we send them a Word 2007 document without converting it into 2003 format. However, it is possible to make Word 2007 always save in 2003 format. By changing a few settings, we can make Word 2007 always save in 2003 format automatically. This can save our time as we won’t have to convert a document each time we have to send one. Follow these steps to make Word 2007 always save in 2003 format:
1.     Open Word 2007.
2.     Click on the Office button.
3.     Click on the Word Options button at the bottom.
4.     The Word Options dialog box will appear.
5.     Select the Save tab.
6.     Select “Word 97-2003 Document” from the menu of “Save files in this format”.  
7.     Click on the OK button.
After this you will never have to worry about mistakenly sending the incorrect format of Microsoft Word 2007 to anyone. The same procedure can be used to change the settings of Microsoft Excel 2007.
courtesy : computerfreetips