Pages

Friday 7 October 2011

இ-மெயில் முகவரி சரிதானா?? எப்படி சோதிக்கலாம்??


              ஜி-மெயில்,யாஹூ போன்ற இ-மெயில் சேவை நிறுவனங்கள் மிகத் தரமான ஸ்பேம் ஃபில்டர்களைக் கொண்டு தேவையற்ற, ஆபத்தான மெயில்களால் பாதிப்பு ஏற்படாதவாறு சிறந்த சேவையை வழங்கி வருகிறது நாம் அறிந்ததே.

              இருப்பினும் சில நுட்பமான வழிகளின் மூலமாக ஹேக்கர்ஸ் இந்த ஸ்பேம் ஃபில்டர்களையும் கடந்து தனது வேலையை காட்டவே செய்கின்றனர்.ஏனெனில் இ-மெயில் சேவையானது ஃபிஷ்ஷிங்கில் நம்மை வீழ்த்த உபயோகப்படும் முக்கியமான சேவையாகும்.

              பெயர் தெரியாத முகவரிகளிலிருந்து இ-மெயில் அனுப்பும் எத்தணையோ இலவச ஆன்லைன் சேவைகள் உள்ளன. இத்தகைய சேவைகளின் வழியாக  ஹேக்கர்கள் சிரமமே இல்லாமல் நமது தகவல்களை திருடிக் கொள்ள முடியும். இது போன்ற சந்தேகப்படும்படியான முகவரியைக் கொண்ட இ-மெயில்களை, அது உண்மையான முகவரிதானா என சோதித்துக் கொள்வது நல்லது.

              EMAIL ADDRESS CHECKER எனும் இணையதளம் இந்த வசதியினை இலவசமாக வழங்குகிறது. இது இ-மெயில் சர்வரை தொடர்புகொண்டு நாம் கொடுத்த இ-மெயில் முகவரி சரிதானா என்பதை உறுதிப்படுத்தி சொல்கிறது.

எப்படி சரிபார்ப்பது:

* முதலில் EMAIL ADDRESS CHECKER தளத்திற்க்கு செல்லவும்.

* CHECK எனும் BUTTONற்க்கு முன்னால் உள்ள கட்டத்தில் சரிபார்க்க விரும்பும் இ-மெயில் முகவரியைக் கொடுக்கவும்

* இப்போது CHECK பட்டனை அழுத்தவும்.



* படத்திலுள்ளவாறு ரிசல்ட் கீழாக உள்ள கட்டத்தில் தெரியும். சரியான இ-மெயில் முகவரிகள் பச்சை நிற டிக் மார்க்குடனும், தவறான முகவரிகள் சிவப்பு நிற க்ராஸ் மார்க்குடனும் தெரியும்.

* இ-மெயில் முகவரி குறித்த மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ள INFO  பட்டனை அழுத்தவும்.

*** கவனிக்கவும் : இலவசமாக நாள் ஒன்றிற்க்கு 3 இ-மெயில் முகவரிகளை மட்டுமே ஒரு IPஅட்ரஸிலிருந்து சோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

courtesy : aman saini

No comments: