Pages

Friday 25 November 2011

சபாரியை default உலவியாக செட் செய்ய

                    நமக்கு விருப்பமான உலவிகளை default ஆக செட் செய்வது எப்படி என்ற வரிசையில் இதுவரை பயர்பாக்ஸ், குரோம், இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஆப்பரா போன்ற உலவிகளை பார்த்தோம் இல்லையாஇன்று ஆப்பிள் வழங்கும் சபாரி உலவியை பார்ப்போமா ?

                  
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளோடு, default ஆக மேக் இயங்குதளத்தில் இயங்கும் வண்ணம் 2003ல் வெளிவர தொடங்கிய சபாரி உலவி, 2007 முதல் விண்டோஸ் இயங்குதளத்திலும் இயங்கும் வண்ணம் வெளிவரத் தொடங்கியது. அக்டோபர் 2011 நிலவரப்படி 62.17 சதவீத பயனர்கள் கைப்பேசி வழியாகவும், 5.43 சதவீத பயனர்கள் கணிணி வழியாகவும் சபாரி உலவியை பயன்படுத்தியுள்ளனர். இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், குரோம் உலவிகளுக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் நான்காவது உலவி சபாரி ஆகும்.

                    
அட்டகாசமான வேகத்துடன் இயங்கக்கூடிய சபாரி உலவியின் தோற்றமும் அருமையாக உள்ளது, ஆப்பராவைப் போன்று இதிலும் ஸ்பீடு டயல் மூலம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் வலைத் தளங்களை எளிதாக திறக்க முடிகிறது.
 


        சபாரியின் சமீபத்திய பதிவான 5.1.1 பெற விரும்புவோர் இங்கு பெறலாம்.

                  
சரி, சபாரியை default ஆக செட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

                  * 
சபாரி உலவியை திறந்து கொள்ளுங்கள்.

                  * 
வலது மேல் மூலையில் உள்ள கியர் ஐகானை அழுத்துங்கள்.


                  * 
விரியும் தெரிவில் "Preference" என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

                  *  Preference
விண்டோவில் "General" டேபில் முதல் பிரிவில் "Default web browser "என்பதற்கு அருகில் உள்ள drop down பட்டனை அழுத்துவதன் மூலம், சபாரியை தேர்ந்தெடுத்து default ஆக செட் செய்து கொள்ளலாம்.


               
மிகவும் எளிதாக இருக்கிறது அல்லவா.

               
அடுத்த பதிவில் இன்னும் மிக மிக எளிதாக, இதுவரை நாம் நிறுவியுள்ள உலவிகளில் எதை default ஆக செட் செய்வது என்பதை சொல்கிறேன்.

               
பதிவு பிடித்திருந்தால் ஓட்டுகளையும், பின்னூட்டங்களையும் இட்டுச் செல்லுங்கள்.


courtesy : viki
 


No comments: