Pages

Wednesday 23 November 2011

இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை default உலவியாக செட் செய்ய

                    நமக்கு விருப்பமான உலவிகளை default ஆக செட் செய்வது எப்படி? என்ற வரிசையில் பயர்பாக்ஸ், குரோம் குறித்து எழுதியிருந்தேன் இல்லையா ?

                    இன்று உலகெங்கிலும் சுமார் 40% மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமானதும், இலவசமானதுமான உலவியைப் பார்ப்போமா ?

                    "வாழைப்பழம் வாங்கினால் தோலும் இலவசம்" என்பதைப் போல, நீங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை உபயோகிப்பவரானால், அதோடு இணைந்தே கிடைப்பது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகும்.

                    1995லிருந்து வெளிவரும் . பதிப்பின் சமீபத்திய பதிப்பு . - 9 ஆகும். 2002 மற்றும் 2003 ஆண்டு வாக்கில் 95% மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த . பயன்பாடு, அதன் பின் பயர்பாக்ஸ் போன்ற உலவிகளின் பலத்த போட்டியினால் கணிசமாக குறைந்து இப்போது சுமார் 40% மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

                    என்னதான் போட்டிகள் அதிகமானாலும் சளைக்காமல் அப்டேட்களை வழங்கி தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது ..

                    இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சமீபத்திய பதிப்பை விண்டோஸ் விஸ்டா(32 பிட்) பயனர்கள் இங்கும், விண்டோஸ் 7(பிட்) பயனர்கள் இங்கும் பெறலாம்.

                    சரி எப்படி இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை default உலவியாக செட் செய்வது என்று பார்ப்போம்.

                    *  இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறந்து கொள்ளுங்கள்.

                    *  மெனு பாரில் "Tools" பிரிவை தேர்ந்தெடுங்கள் ( மெனு பார் நேரடியாக தெரியாதவர்கள் ALT கீயை அழுத்த மெனு பார் தோன்றும் ).

 
                     *  Tools பிரிவை அழுத்த கிடைக்கும் தெரிவிலிருந்து "Internet Options" என்பதை தேர்ந்தெடுங்கள். Internet Options விண்டோ தோன்றும்.


                     *  Internet Options விண்டோவில் "Programs" பிரிவிற்கு செல்லுங்கள்.


                    
                    *  இப்போது . ஐகானுக்கு வலப்புறமாக "Make Default" எனும் button இருக்கிறதா ?

                    *  இந்த button அழுத்த இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உங்கள் default உலவியாக மாறிவிடும்.

பதிவுகள் குறித்த தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இறைவன் நாடினால் நாளை மற்றுமொரு அருமையான உலவியுடன் வருகிறேன்.

courtesy : viki

No comments: