Pages

Thursday 24 November 2011

ஆப்பராவை default உலவியாக செட் செய்ய

          நமக்கு விருப்பமான உலவிகளை default ஆக செட் செய்வது எப்படி? என்ற வரிசையில் இதுவரை பயர்பாக்ஸ், குரோம், இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் குறித்து பார்த்தோம் இல்லையா ?

          இன்று, ஆப்பரா உலவி குறித்து பார்ப்போமா ?

          1996 லிருந்து தனது சேவையை வழங்கிவரும் ஆப்பரா முதலில் விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமே இயங்கக்கூடியதாக இருந்தது. பின் 2000 லிருந்து மற்ற இயங்குதளத்திலும் இயங்கும் வகையில் வெளிவரத் தொடங்கியது. உலவி பயனர்களில் சுமார் 4% மக்கள் பயன்படுத்திவரும் ஆப்பரா, உக்ரைன் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமானதொரு உலவி ஆகும். ஆப்பரா, கைப்பேசிகளுக்கும்மினி ஆப்பராஎன்ற பெயரில் கிடைக்கிறது. உலக அளவில் ஆப்பரா உலவி பயனர்கள் எண்ணிக்கை 200 மில்லியனை தொட்டுவிட்டதாக ( கைப்பேசி உலவிகளையும் சேர்த்து ) சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது.

    ஆப்பரா உலவி இல்லாதவர்கள் இதன் சமீபத்திய வெளியீடான ஆப்பரா 11.60 1 இங்கு பெறலாம்.

    கைபேசிகளில் பயன்படுத்த விரும்புபவர்கள் உங்கள் கேபேசி மாடல், இயங்குதளத்தைப் பொறுத்து இங்கு பெறலாம்.

    சரி, ஆப்பராவை default ஆக செட் செய்வோமா?

    *  ஆப்பராவை திறங்கள். பொதுவாக ஆப்பராவை திறக்கும் போதே, default ஆக இல்லாத நிலையில் default ஆக செட் செய்யவா என உங்களிடம் அனுமதி கேட்கும். "Yes" எனும் பட்டனை அழுத்தி இங்கேயே செட் செய்து கொள்ளலாம்.


     *  அச்சச்சோ, "No" பட்டனை அழுத்திவிட்டேனே, என்ன செய்வது என்று வருத்தப்பட தேவையில்லை. வாருங்கள் ஆப்பரா மெனுவிலிருந்தே செட் செய்வோம்.

    *  இடது மேல் மூலையில் உள்ள "ஆப்பரா மெனுவை" அழுத்த தெரிவுகள் தோன்றும். இதை "ALT" கீயை அழுத்தியும் பெறலாம்.

 
    *  இதில் "Settings" என்பதில் கர்சரை வைக்க வலது புறம் தோன்றும் முதல் தெரிவான "Preference" என்பதை தேர்ந்தெடுங்கள்.

          *     Preference விண்டோ "CTRL + 12" அழுத்த நேரடியாக தோன்றும்.


          *     Preference விண்டோவில் "Advanced" பிரிவில் "Programs" என்பதை தேர்ந்தெடுங்கள்.

    *  இந்த பிரிவில் உள்ள "details" கீயை அழுத்துங்கள்.

    *  இங்கு உங்கள் கணிணியில் உள்ள நீட்சிகளையும்(extensions) அதன் default புரோகிராம்களும் பட்டியலிடப்படும். இதில் உள்ள "Select All" என்பதை தேர்ந்தெடுத்து "Save" செய்ய அனைத்து நீட்சிகளுக்கான default அப்ளிகேஷனாக ஆப்பரா செட் செய்யப்படும். (குறிப்பு : Save All தேர்ந்தெடுக்க jpg,jpeg நீட்சிகளும் ஆப்பராவிலே திறக்கும், இதை தவிர்க்க தற்போது default ஆக உள்ள உலவி செட் செய்யப்பட்டிருக்கும் நீட்சிகளை மட்டும்( .htm, .html போன்ற) தேர்ந்தெடுத்து Save செய்யவும்.)


     *  இனி ஆப்பராவை default உலவியாக உபயோகித்து மகிழலாம்.

இறைவன் நாடினால் நாளை வேறொரு உலவியுடன் வருகிறேன்.

பதிவு பிடித்திருந்தால் உங்கள் பொன்னான வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இட்டு செல்லுங்கள்.

 courtesy: viki

No comments: