Pages

Tuesday 22 November 2011

குரோமை default உலவியாக செட் செய்ய

                    நமக்கு பிடித்த உலவிகளை எப்படி default ஆக செட் செய்வது எனும் வரிசையில் பயர்பாக்ஸை default உலவியாக செட் செய்வது எப்படி என்று நேற்று பார்த்தோம் இல்லையா?

                    இன்று குரோமை default உலவியாக எப்படி செட் செய்வது என்று பார்போமா ? 

                    குரோம் தனது வெப் ஸ்டோர் மூலமாக பயனாளர்களுக்கு எண்ணற்ற அப்ளிகேஷன்களை இலவசமாக வழங்கி வருகிறது. Angry Birds, Cricket விளையாட்டுகள், இணைய இணைப்பு இல்லாத நிலையில் நமது ஜிமெயிலை இயக்குவது போன்ற வகை வகையான அப்ளிகேஷன்களை இலவசமாகவே வழங்குகிறது. என்னென்ன அப்ளிகேஷன்கள் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

                    குரோம் உலவி இல்லாதவர்கள் சமீபத்திய பதிவை இங்கு பெறலாம்.

சரி வாருங்கள் குரோமை default ஆக செட் செய்வோம்:

                    *  உங்கள் குரோம் உலவியை திறந்து கொள்ளுங்கள்.

                    *  வலது மேல் மூலையில் உள்ள செட்டிங்க்ஸ் ஐகானை அழுத்துங்கள், விரியும் தெரிவில் Options என்பதை தேர்ந்தெடுங்கள்.



                    *  இப்போது Options விண்டோ புதிய பகுதியில்(tab) திறக்கும்.

                    *  இதில் basics எனும் தெரிவில் உள்ளீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.


                    *  இந்த basics பகுதியின் கீழ் கடைசியாக "default browser" என்பதற்கு அருகில் "Make Google Chrome My default browser" என்ற Button இருக்கிறதா. இந்த Buttonஐ அழுத்துவதன் மூலம் குரோம் உங்கள் default உலவியாக செட் செய்யப்படும்.


நாளை வேறொரு உலவியுடன் வருகிறேன் இறைவன் நாடினால்....

கருத்துக்கள் ஏதாவது இருந்தா சொல்லீட்டு போங்க....

courtesy : viki

No comments: