Pages

Monday 21 November 2011

பயர்பாக்ஸை default உலவியாக செட் செய்ய

                       "உலவிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்" என்று பாடும் அளவிற்கு பல உலவிகள் வந்துவிட்டன இல்லையா.   ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதிகள், பயன்பாடுகளை வழங்கி வருகிறது...

                       சரி, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட உலவிகளை நிறுவியிருக்கும் நிலையில் நமக்கு மிகவும் பிடித்த உலவியை default ஆக எப்படி செட் செய்வது என்று பார்ப்போமா...

முதலில் பயர்பாக்ஸ் உலவியை எப்படி default ஆக செட் செய்வது என்று பார்ப்போம்.

                       *  பயர்பாக்ஸ் உலவியை திறந்து கொள்ளுங்கள்

                       *  நீங்கள் Firefoxன் சமீபத்திய பதிவை உபயோகித்தால் மெனு பார் நேரடியாக தெரியாது, எனவே Alt கீயை அழுத்துங்கள், மேலே மெனு பார் தெரியும் இதில் Tools என்பதில் சென்று Options எனும் தெரிவை தேர்ந்தெடுக்கவும்......  இப்போது Options விண்டோ தோன்றும்....


                       *  Options விண்டோவை திறக்க மற்றொரு முறையும் உள்ளது ..... இடது மேல் மூலையில் உள்ள Firefox எனும் Button அழுத்தி விரியும் தெரிவில் Options என்பதற்கு நேரே உள்ள Options தெரிவில் அழுத்தவும்....



                       *  இப்போது Options விண்டோவில் கடைசியாக உள்ள "Advanced" எனும் பிரிவில் அழுத்தவும், இதற்க்கு கீழே உள்ள பிரிவில் "General" பிரிவை தேர்வு செய்துள்ளீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும்....


                       *  படத்தில் உள்ளது போன்று "Always check to see if Firefox is the default browser on startup" என்பதற்கு அருகில் உள்ள Check Now அழுத்துவதன் மூலம் நீங்கள் பயர்பாக்ஸ் உலவியை default ஆக செட் செய்துள்ளீர்களா என்று உறுதி செய்து கொள்ள முடியும்.

                       *  ஒருவேளை default ஆக இல்லாவிடினும் இங்கு மாற்றிக் கொள்ள முடியும்.


                       மற்ற உலவிகளையும்  எப்படி default உலாவியாக மாற்றுவது என்பதை இங்கயே பகிர்ந்தால் மிக நீண்ட பதிவாக தெரியும். ஆகவே நாளை வேறொரு உலாவியுடன் உங்களை சந்திக்கிறேன் இறைவன் நாடினால்......

                       தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.

நன்றி : விக்கி

No comments: