இணையத்திற்கான முக்கியமான பயன்பாடு தகவல்களைத் தேடுவதற்க்காகும். எவ்வளவு விரைவாக நாம் விரும்பிய தகவல்களைப் பெற்றுக் கொள்கிறோமோ அந்த அளவிற்க்கு நாம் அதிகமாக தகவல்களை அறிந்து கொள்கிறோம் இல்லையா.
நாம் ஏதேனும் ஒரு தகவலைப் இணையத்தில் படித்துக் கொண்டிருக்கையில், அதிலுள்ள ஒரு வார்த்தை,தகவல் குறித்து மேலும் விளக்கம் பெற விரும்பினால் தேடுதளம் செல்ல டாஸ்க் பார் சென்று டைப் செய்வோம், அல்லது அந்த வார்த்தையில் ரைட் கிளிக் செய்து நாம் விரும்பிய தேடு இயந்திரம் மூலமாக தகவல்களைப் பெற்றுக் கொள்வோம்.
இவ்வளவு சிரமப் படாமல், தேடவேண்டிய வார்த்தையை RIGHT CLICK செய்து நமக்கு பிடித்த தேடு இயந்திரத்தில் தகவலைப் பெற்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.
இம்முறையில் நமது நேரத்தை சேமிக்கவே DROG AND DROP ஆட்-ஆன் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலவிகளுக்காக இருக்கிறதே.
பயன்படுத்தும் முறை:
பயர்பாக்ஸ் உலவிகளுக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் தகவல் தேட நினைக்கும் வார்த்தையை செலக்ட் செய்து ட்ராக் செய்யவும்.
இப்போது கூகுள்,யாகூ உள்ளிட்ட ஆறு தேடி இயந்திரங்களில் எதன் வழி தேட விரும்புகிறீர்கள் என பரிந்துரைக்கும் ஒரு சிறிய விண்டோ தோன்றும்.
இதில் எந்த தேடி இயந்திரத்தில் ட்ராக் செய்கிறீர்களோ அதன்வழி ரிசல்ட் கிடைக்கும்.
இந்த விண்டோவினை நீங்கள் விரும்பிய முறையில் அமைத்துக் கொள்ள முடியும்.
குரோம் உலவிக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இது சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும்.
இதில் 16 கட்டங்கள், 2 ட்ராப் டவுன் மெனு மற்றும் பட்டன்கள் இருப்பதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கட்டத்திலும் பெயர் மற்றும் URL க்கான இடம் இருக்கிறது.
கீழே உள்ள ட்ராப் டவுணில் தேடும் தகவலை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டேபில் காட்டுவதா அல்லது புதிய டேபில் காட்டுவதா என தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் உள்ளது.
நடுவில் உள்ள 4 கட்டங்கள் காலியாகவும், அதை சுற்றி உள்ள 12 கட்டங்களில் நாம் விரும்பிய தேடு இயந்திரத்தை செட் செய்து கொள்ளலாம்.
எப்படி செட் செய்வது:
உதாரணமாக http://www.google.com.sg/search?&q=
மேலே உள்ள DEFAULT URLஐ சற்று கவனித்தீர்களானால் அது சிங்கப்பூருக்கான கூகுள் தேடி ஆகும்.
இதை மாற்ற .sg ஐ நீக்கி விடுங்கள்....http://www.google.com/search?&q=
அவ்வளவுதான் இது போன்று விரும்பிய மற்ற இடங்களிலும் URLஐ அமைத்துக் கொள்ளலாம்.
பயன்படுத்திப் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் சொல்லுங்க சகோஸ்
courtesy : viki





















